வணங்குவோர்க்கு வறுமைநீக்கி துதிப்போர்க்கு துன்பம் நீக்கி மாதா சரஸ்வதி அம்மையாரின் அருள் வாக்கிலே நின்று பேசுகின்ற தெய்வமாம் அன்னை அங்காள பர்மேஸ்வரி அம்மன் திருக்கோவில் தமழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் போகும் வழித்தடத்தில் அதகபாடி என்ற ஊரில் உள்ளது.
இங்கு வெள்ளிக்கிழமைகளில் மாதா சரஸ்வதி அம்மையார் மேல் அருள் வந்து அருள் வாக்கு நடக்கும். நாடி வருபவர்களின் துன்பத்துக்கான காரணங்களும் அதற்கான பரிகாரங்களும் கிடைக்கும். உடல் நலம், குழந்தை பேறின்மை, கல்யாணத்தடைகள், தொழில் ஆகிய எல்லா வகையான சிக்கல்களுக்கும் எளிய முறையில் அமாவாசை அன்று பரிகார பூஜைகள் நடக்கும். இதனால் பலன் அடைந்தவர்கள் ஏராளமானோர் ஒவ்வொரு அமாவாசைக்கும் இரவு ஏழுமணியளவில் உலக மக்களின் நலனுக்காகவும் உலக சமாதானத்திற்காகவும் 108 மூலிகைகள் கொண்டு வேள்வி நடத்தப்படும். இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் நவராத்திரி ஒன்பது தினங்களும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெறுகின்றது.
தர்மபுரி- அங்காளம்மன் சிம்மபீடத்தில் அமாவாசை அன்று 108 திரவிய வேள்வி பூஜை,மயான பூஜை, அம்மனுக்கு அபிஷேக பூஜை,அலங்கார பூஜை ,ஊஞ்சல் உற்சவம்,அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகின்றது.
கோவை - கருமத்தம்பட்டி அங்காளம்மன் சிம்மபீடத்தில் பெளர்ணமி அன்று 108 திரவிய வேள்வி பூஜைகளும் அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகின்றது.பூஜையை தொடர்ந்து 10 நாட்கள் அருள் வாக்கு நடைபெறுகிறது.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 15 நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி சிவராத்திரி அன்று மயானக்கொள்ளை செல்லும் விழா அடுத்த நாள் பால் அபிஷேகமும் திருத்தேர் பவனி நிகழ்வும் நான்காவது நாள் திருகல்யாணமும் சிவன் சக்தியாக திருவீதி உலாவும் ஐந்தாம் நாள் கும்ப பூஜையுடன் சயன உற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.
மேலும் சேலம், பெங்களுர், கோயமுத்தூர், தர்மபுரி, சென்னை ஆகிய ஊர்களில் அன்னையின் பெயரால் வழிபாடு மன்றங்கள் தொடங்கி பக்தர்கல் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி செலுத்துதல் சிறப்பாக நடைபெறுகின்றது..
அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி சிம்ம பீடம் வேள்விக் குழுவினரால் மாதா சரஸ்வதி அம்மையார் தலைமையில் திருக்கோவில்களுக்கு தமிழ் ஆகம முறைபடி திருக்குட நன்னீராட்டு விழா செய்யப்படுகின்றது. வருடத்தில் இரண்டு முறை 108 பச்சிலை மூலிகை கொண்டு மஹா லட்சுமிக்கு அம்மனுக்கு 108 கலசங்கள் வைத்து வேள்விவுடன் கோவை சிம்ம பீடத்திலும், தர்மபுரி அதகபாடி ஆலயத்திலும் பூஜை நடைபெறுகின்றது.
இப்பொழுது தர்மபுரி அதகபாடியில் ஆலயத் திருப்பணி முயற்சிகள் நடைபெறுகின்றது. ஆலயத் திருப்பணிக்கு பக்தர்களின் உதவிகள் வரவேற்கப்படுகின்றது.